ஜெய் நடிக்கும் 'தீராக்காதல்' படத்தின் டிரைலர் நாளை வெளியீடு
|‘தீராக்காதல்’ படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் ரோகின் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'தீராக் காதல்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
3 hearts in love going on an emotional ride! Get ready to witness #TheeraKaadhal TRAILER releasing at 6PM tomorrow…!#தீராக்காதல்
@rohinv_v @Actor_Jai @aishu_dil @SshivadaOffcl @VriddhiVishal @Music_Siddhu @NRAVIVARMAN ✂️️ @editor_prasanna ️… pic.twitter.com/Kjzy2XBqIZ